பெருஞ்சித்திரனார் பேத்தியை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2011 17:17
உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், ம. தி. மு. க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை :
தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழி, தனது உதவியாளர் திருமலையுடன் இலங்கைக்குச் சென்று முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து திரும்பும் வழியில்
ஓமந்தை எனும் இடத்தில் சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.
முறையான கடவுச் சீட்டு, இலங்கை அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவை இருந்தும் அவரை கைது செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே இந்த பிரச்னையில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு அவர்களை விடுவிக்க வேண்டிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறோம்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோருக்கு தந்திகளையும் அனுப்பி வைத்திருக்கிறோம். தமிழகமெங்கும் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பிலும் தந்திகள் அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறோம்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.