பார்வதி அம்மையார் ஈகச்சாம்பல் கரைப்பு நிகழ்ச்சி - தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
திங்கட்கிழமை, 21 மார்ச் 2011 17:38 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தமிழீழப் பேரன்னை பார்வதி அம்மையார் அவர்கள் மறைந்து 31ஆவது நாள் நிகழ்ச்சி 22-03-11 அன்று தமிழீழப் பகுதியெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதே நாளில் சென்னையில் மாலை 4 மணிக்கு மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே தமிழர்கள் திரளாகக் கூடி கடலில் அவர் நினைவாக மலர் தூவும் நிகழ்ச்சி நடைபெறும்.
பார்வதி அம்மையார் அவர்களின் ஈகச்சாம்பலும் அன்று கடலில் கரைக்கப்படும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் தோழர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தமிழர்கள் பெருந்திரளாக இந்நிகழ்ச்சியில் பங்குகொண்டு பார்வதி அம்மையாருக்கு வீரவணக்கம் செலுத்த திரளும்படி வேண்டிக்கொள்கிறேன். |