சமச்சீர் கல்வித் திட்டம் இவ்வாண்டே செயற்படுத்த வேண்டும் |
|
|
|
புதன்கிழமை, 15 ஜூன் 2011 18:27 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : தமிழ்நாட்டில் பலவேறுப் பாடத்திட்டங்களில் கீழ் மாணவர்கள் கல்வி கற்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து அனைவருக்கும் ஒரேமாதிரியான பாடத்திட்டம் வேண்டும் என கல்வியாளர்களும் பெற்றோர்களும் விரும்பியதிற்கிணங்க சமச்சீர் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டது.
ஆனால் அவசரத்தில் அள்ளித் தெளித்தக் கோலமாக அதை தி.மு.க. அரசு உருவாக்கியதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க. அரசு அதை நிறுத்தி வைத்ததாக அறிவித்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் போக்கப்பட வேண்டும் என்பதிலோ பாடங்களில் புகுத்தப்பட்டுள்ள அரசியல் நீக்கப்பட வேண்டும் என்பதிலோ இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. உச்ச நீதிமன்றம் ஆணையிட்டபடி 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமுல்படுத்த வேண்டும். இதர வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களைப் பரிசீலிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்படும் குழுவினரின் அறிக்கையை இரு வாரக் காலத்திற்குள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதன் அனுமதியைப் பெற்று இந்த ஆண்டே முழுமையாக சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன். |