ஜூன் 26 கடற்கரையில் திரளுவீர் - பழ. நெடுமாறன் அழைப்பு |
|
|
|
வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 18:37 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்தும் வகையில் சென்னைக் கடற்கரையில் ஜூன் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு மெழுகுதிரி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் முன்னின்று நடத்துகிறது.
ஐ.நா. மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்துலக நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறவிருப்பது சிறப்புக்குரியது. இந்நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் பங்கெடுத்து நமது உணர்வை வெளிப்படுத்தத் திரண்டு வருமாறு வேண்டிக்கொள்கிறேன். |