சிறுவனைச் சுட்டுக் கொன்ற படை வீரர் - பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
திங்கட்கிழமை, 04 ஜூலை 2011 18:40 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: சென்னை இராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குள் பழம் பறிக்கச் சென்ற சிறுவர்கள் மீது படை வீரர் ஒருவர் சுட்டதின் காரணமாக தில்சான் என்ற சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான். இதைக் கண்டு தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து சுட்டுக் கொல்கிறது. இப்போது இந்திய இராணுவமும் நமது நாட்டு மக்களையே சுட்டுக் கொல்லும் நிலை உருவாகியுள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்ட படை வீரர் மீது கொலைக் குற்றத்திற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். |