ஜூலை 8ஆம் தேதி இயக்கத்தில் பங்குகொள்க பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 06 ஜூலை 2011 18:43
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இராசபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை ஆதரித்தும்
இலங்கைத் தமிழருக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய அளவில் இயக்கம் நடத்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலத் தலைநகர்களிலும் ஜூலை 8ஆம் தேதியன்று நடத்தப்பட இருக்கிற இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.