தமிழ்ப் பேரறிஞர் சிவத்தம்பி மறைவு - பழ. நெடுமாறன் இரங்கல் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 07 ஜூலை 2011 18:44
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்ப் பேரறிஞர் ப. சிவத்தம்பி அவர்கள் காலமான செய்தி அறிந்து தமிழ் கூறும் நல்லுலகம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் செயலாளராகவும் மற்றும் உலகப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றி
தமிழ் ஆராய்ச்சிக்கு புது நெறியை வகுத்தப் பெருமைக்குரியவர் அவர். அவரது நூல்களும் கட்டுரைகளும் தமிழுக்குக் கருவூலங்கள் ஆகும்.
கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவரின் மறைவு பேரிழப்பாகும். உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.