இலங்கையில் மனித உரிமை மீறல்கள் - இந்தியா மெளனம் - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 23 ஜூலை 2011 18:46
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படாவிட்டால் அந்நாட்டிற்கு அளித்து வரும் பொருளாதார உதவியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இலங்கைக்கு பொருளாதார உதவி அளித்து வரும் மேற்கு நாடுகளும் தங்கள் உதவியை நிறுத்தக்கூடும் எனத் தெரிகிறது.
ஆனால், இந்தியா மட்டும் தொடர்ந்து இரணுவ உதவி மட்டுமல்ல பொருளாதார உதவியையும் இலங்கைக்குச் செய்து வருகிறது. இதற்கெதிராக இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.
இவ்வளவுக்கும் பிறகு, இந்தப் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் மெளனம் சாதிக்கிறார். பிரதமரின் இந்த மெளனம் கள்ளத்தனமான மெளனமாகும். இலங்கைக்கு மறைமுகமாக எல்லா உதவியையும் செய்து வரும் இந்திய அரசின் கள்ளத்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.