தமிழக முதல்வரை இழிவுபடுத்துவது இந்தியாவை இழிவுபடுத்துவதாகும் -பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 09 ஆகஸ்ட் 2011 18:48
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இராசபக்சேயை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இழித்தும் பழித்தும்
அரசியல் நாகரிகமற்ற முறையில் பேசியுள்ள இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய இராசபக்சேயின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக முதல்வரை மட்டுமல்ல. ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள தமிழக சட்டமன்றத்தையும் அவர் இழிவு படுத்தியுள்ளார். இந்தத் துணிவு அவருக்கு வந்ததற்கு இந்திய அரசே முழுமையான காரணமாகும்.
மாநில முதல்வர்கள் இல்லையென்றால் இந்தியா இல்லை. தமிழக முதல்வரை அவமதிக்கும் போக்கினை அண்டை நாட்டின் அதிகாரி ஒருவர் மேற்கொள்வதை அனுமதிப்பது ஒட்டுமொத்தத்தில் இந்தியாவை அவமதிப்பதாகும். தமிழக முதல்வரையும் சட்டமன்றத்தையும் வரம்புமீறித் தாக்கியுள்ள கோத்தபாய இராசபக்சேயின் செயலைக் கண்டிக்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.