முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை - கம்பம் மக்கள்மீது தடியடி - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011 19:34 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கும் கேரளம் சென்ற அய்யப்ப பக்தர்களைத் தாக்கியும் தொடர்ந்து அடாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மலையாளிகளின் செயலைக் கண்டிக்கும் வகையில், கம்பம் பகுதி மக்களின் தன்னெழுச்சியை ஒடுக்கும் வகையில்,
அந்த மக்கள் மீது கொடுமையான வகையில் தடியடி நடத்திய தமிழக காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதாவை நான் வற்புறுத்துகிறேன். பெரியாறு அணைப் பகுதியில் அத்துமீறிப் புகுந்து அணையை இடிக்க முயற்சி செய்தவர்கள்மீதும் தமிழக ஐயப்ப பக்தர்களைத் தாக்கியவர்கள் மீதும் இதுவரை கேரள காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் அதேவேளையில் அமைதி வழியில் எதிர்ப்புத் தெரிவித்த தமிழக விவசாயிகளை தமிழக காவல்துறை தாக்கியிருப்பது கண்டனத்துக்குரியதாகும். இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழகமெங்கும் இந்தப் போராட்டம் பரவும் என எச்சரிக்கிறேன். |