முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை - கேரளம் நோக்கிச் செல்லும் சாலைகளில் முற்றுகைப் போராட்டம் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011 19:37
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்க கேரளம் மறுப்பதையும், புதிய அணை கட்டவேண்டும் என பிடிவாதமாக கேரளம் வற்புறுத்துவதையும் கண்டிக்கும் வகையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கிச் செல்லும் 13 சாலைகளிலும் எந்தப் பொருளையும் கொண்டுச்செல்லாமல் தடுக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 21ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு இந்த முற்றுகைப் போராட்டம் 13 சாலைகளிலும் நடைபெறும். கம்பம் லோயர் கேம்ப் பகுதியில் நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தில் நானும் வைகோ அவர்களும் கலந்துகொள்ளுகிறோம். முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். அறவழியில் நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி மக்களை வேண்டிக்கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.