தமிழர்களின் உணர்வை மதிக்காத பிரதமருக்கு எதிராகக் கருப்புக்கொடி - பழ. நெடுமாறன் அழைப்பு |
|
|
|
வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011 19:39 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில், உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை நிறைவேற்றத் தவறியும், அணையைப் பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்ற தமிழகக் கோரிக்கையை ஏற்க மறுத்தும் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக நலன்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்.
கூடங்குளம் அணுமின்உலைப் பிரச்சினையில் போராட்டக் குழுவினருடன் ஒருபுறம் பேச்சு நடத்திக்கொண்டே மறுபுறம் 15 நாட்களில் அணுமின் உலை செயல்படத் தொடங்கும் என எதேச்சதிகார முறையில் அறிவித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். தமிழக மக்களின் நலன்களைச் சிறிதும் எண்ணிப் பாராமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் பிரதமர் மன்மோகன்சிங் தமிழர்களைத் துச்சமாக மதித்து தமிழகத்திற்கு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவருக்கு எதிராக டிசம்பர் 26ஆம் தேதியன்று மாலை காரைக்குடியில் கருப்புக்கொடி போராட்டம் கா. பரந்தாமன் தலைமையில் நடத்தப்படும். தோழமை அமைப்புகளுடன் இணைந்து நடைபெறவிருக்கும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழர்களின் கொதிப்புணர்வை பிரதமருக்குத் தெரிவிக்க முன்வருமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன். |