பசுபதி பாண்டியன் படுகொலை - பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012 19:41 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் சிறந்தக் காவலனாக திகழ்ந்தவர். ஈழத்தமிழர் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, காவிரிப் பிரச்சினை போன்ற தமிழர் பிரச்சினைகளில் தீவிரமான ஈடுபாடு காட்டி செயல்பட்டவர். அவரின் மறைவு தென்மாவட்டங்களில் பதற்ற நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. அதைத் தணிக்கவும், இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கண்டுபிடிக்கவும், தமிழகக் காவல்துறை விரைந்து செயல்படவேண்டும். மறைந்த தலைவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். |