நிபுணர் குழுவுக்கு கேரள அமைச்சர் மிரட்டல் - நடவடிக்கை எடுக்குமாறு பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
புதன்கிழமை, 25 ஜனவரி 2012 19:42 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப்பெரியாறு அணைத் தொடர்பான உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை கேரள அரசுக்கு எதிராக இருக்குமானால் அதனை ஏற்க மாட்டோம் என கேரள அமைச்சர் கே. பாபு என்பவர் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
நிபுணர் குழுவின் அறிக்கை பிப்ரவரி மாதம் இறுதியில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட இருக்கும் நேரத்தில் அந்தக் குழுவில் உள்ளவர்களை நிர்பந்தப்படுத்தும் வகையிலும் மிரட்டும் வகையிலும் கேரள அமைச்சர் கூறியிருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். அவர் மீது உச்சநீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். |