இலங்கைக்கு இந்தியா ஆதரவு - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012 19:57
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
ஐ.நா. மனித உரிமை குழுக்கூட்டத்தில் போரின் போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தொடர்பாக, அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை எதிர்த்தும், இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் எனவும்,
இதை வெளிப்படையாக இந்தியா தங்களிடம் தெரிவித்து விட்டதாகவும் இந்தியாவின் ஆதரவு என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதியானது எனவும் இலங்கையின் மனித உரிமைக்கான சிறப்புத் தூதர் மகிந்த சமரசிங்கே தெரிவித்திருக்கிறார்.
இதைக் கண்டு உலகெங்கும் உள்ளத் தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மனித நேயமற்ற முறையில் இந்திய அரசு நடந்து கொள்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.