ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் - பழ. நெடுமாறன் வரவேற்பு |
|
|
|
வியாழக்கிழமை, 01 மார்ச் 2012 19:58 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்றுகுவித்த இராசபக்சே கும்பலை விசாரித்து உரிய தண்டனையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் மார்ச் 6ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முன்வந்துள்ள இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.
இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் எல்லா இடங்களிலும் பங்கேற்கும்படியும் அவர்களுக்கு வாழ்த்துக்கூறும்படியும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புகளையும் தோழர்களையும் வேண்டுகிறேன். |