இராசபக்சேவை விரட்டியடியுங்கள் - பிரிட்டானிய தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
புதன்கிழமை, 06 ஜூன் 2012 20:12 |
பிரிட்டிஷ் அரசி மகுடம் சூட்டிய வைர விழாவில் பங்குகொள்ள ராசபக்சே வரவிருக்கிறார். இந்த விழாவில் பங்குகொள்ளும் தகுதியோ அல்லது உரிமையோ இராசபக்சேவுக்கு அணு அளவும் கிடையாது. இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து இன்னும்
பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களை வதைமுகாம்களில் வதைத்துவரும் இராசபக்சேவுக்கு நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது தமிழர்களின் நீங்காத கடமையாகும். சென்ற முறை அவர் பிரிட்டன் வந்தபோது பிரிட்டானியா வாழ் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று அவரை விரட்டியடித்ததைப் போல இந்த முறையும் அனைத்துத் தமிழர்களும் ஒற்றுமையுடன் நமது எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன். |