சிறப்பு முகாம் தமிழர்களை விடுதலை செய்க - பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012 19:10 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: பல ஆண்டுகாலமாக எவ்வித விசாரணையுமின்றி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தங்களின் மீதுள்ள வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும்
அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல் நிலை அபாயகரமான கட்டத்தை எட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதியை செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி அங்குள்ள ஈழத் தமிழர்களின் வழக்குகளைப் பரிசீலனை செய்து அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை வேண்டிக்கொள்கிறேன். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கல்பட்டில் 30-6-12 அன்று நடைபெறவிருக்கும் முற்றுகைப் போராட்டத்திலும் திரளாகப் பங்கேற்கும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன். |