காவிரிப் பாசன விவசாயிகளுக்கு 12 மணிநேர மின்சாரம் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பழ. நெடுமாறன் பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 06 டிசம்பர் 2012 14:16
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
காவிரிப் பாசன விவசாயிகளுக்கு தங்குத் தடையில்லாமல் நாள்தோறும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கவும் மற்றும் விவசாயிகளுக்கு சலுகை விலையில் நீர்த்தெளிப்பான்கள் வழங்கவும்,
விவசாயிகள் செலுத்தவேண்டிய வேளாண் காப்பீட்டுக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் வேலை வாய்ப்பு இழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை அளிக்கவும் பயிர் காய்ந்து போன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாய் வீதம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டுள்ள ஆணையை வரவேற்றுப் பாராட்டுகிறேன். 12 இலட்சம் ஏக்கரில் நெற்பயிர் செய்துள்ள விவசாயிகளின் துன்பத்தை இது ஓரளவு குறைக்கும். முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த உதவிகள் தங்குத் தடையில்லாமல் உடனடியாக விவசாயிகளுக்குச் சென்று சேர விரைவான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.