தமிழர் பகுதியிலிருந்து இராணுவம் வெளியேற மறுப்பு ஐ.நா. படையை நிறுத்த பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2013 15:10 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்கக் குழு அளித்தப் பரிந்துரைகளின்படி தமிழர் பகுதியிலிருந்து வெளியேற முடியாது என சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
இராசபக்சேயின் இரட்டை முகத்திற்கு இது எடுத்துக்காட்டு. நல்லிணக்கக் குழுவை அமைத்தவரும் அவரே, அதன் பரிந்துரைகள் உலக மக்களை ஏமாற்றுவதற்காக அளிக்கப்பட்டவை. அதை ஏற்க இராணுவம் மறுத்திருப்பதும் இராசபக்சேயின் கட்டளைப்படியே. ஆக ஒரே வேளையில் உலகை ஏமாற்றவும் தமது சிங்கள மக்களை திருப்திப்படுத்தவும் இராசபக்சே கையாள்கிற தந்திரம் இது. ஐ.நா. இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்றிவிட்டு ஐ.நா. படையை அங்கு நிறுத்த வேண்டும். அப்போதுதான் எஞ்சியுள்ளத் தமிழர்களும் பாதுகாக்கப்படுவார்கள். இல்லாவிட்டால் ஒட்டுமொத்தத் தமிழினமும் அழிக்கப்பட்டு விடும். |