ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த மறுத்த முதல்வருக்குப் பழ. நெடுமாறன் பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2013 14:29
இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். இலங்கை அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இனஅழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பது தமிழக மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும். எனவே இலங்கை வீரர்கள் இப்போட்டிகளில் பங்குபெறக்கூடாது என ஆசிய தடகள கழகத்திற்கு தமிழக அரசு தெரிவித்திருந்தும் எவ்விதப் பதிலும் கிடைக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டிருக்கிறார்.
அண்மைக் காலமாக தமிழக உரிமைகளைப் பாதுகாக்கவும் நிலைநாட்டவும் மத்திய அரசுடன் போராடும் துணிவுடன் செயல்படுகிற முதல்வருக்கு கட்சிகளுக்கு அப்பால் தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது நீங்காத கடமையாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.