உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை விடுதலை செய்க பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 11:59 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இராசபக்சே அரசு மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரை நள்ளிரவில்
போலீஸ் கைது செய்து மருத்துவமனையில் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். உடனிருந்த ஆதரவாளர்களையும் கைது செய்து இன்று காலையில் அவர்களை மட்டும் விடுவித்திருக்கிறார்கள். தனியார் இடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களை பூட்டை உடைத்து உள்ளே சென்று கைது செய்தது சட்ட நெறிகளுக்கும் சனநாயகத்திற்கும் முரணானது. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அந்த 8 மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படி வற்புறுத்துகிறேன். தமிழகமெங்கும் உள்ள மாணவர்கள் ஒன்றுபட்டு கட்டுப்பாடாகவும் உறுதியாகவும் போராடுவதின் மூலமே அவர்களின் நோக்கம் வெற்றிபெறும். மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகத் திரளும்படி அனைத்துக்கட்சியினரையும் வேண்டிக்கொள்கிறேன். |