தி.மு.க. நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்! பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013 13:59 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தி.மு.க.வின் குறைந்த பட்ச கோரிக்கைகளைக்கூட மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் இருந்து
வெளியேறுவதாகவும் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். காலங்கடந்தேனும் இந்த முடிவை அவர் எடுக்க முன்வந்ததைப் பாராட்டுகிறேன். கடந்த காலத்தில் மத்திய அரசுக்கு எச்சரிக்கைகள் விடுத்துவிட்டுப் பின்னர் பின்வாங்கியதைப் போல இருக்காமல் இந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழகம் எங்கும் மாணவர்களும் வழக்கறிஞர்களும் திரைப்படத் துறையினரும் கொந்தளித்து நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தின் விளைவாகவே தி.மு.க. இத்தகைய நிலை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தமிழர்கள் அனைவரும் இணைந்து போராடுவதின் மூலமே ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும். ஒன்றுபட்டுப் போராடுவோம். வெற்றி பெறுவோம்.
|