தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளரை விடுதலை செய்ய வேண்டும் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
சனிக்கிழமை, 28 டிசம்பர் 2013 18:45 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர் மகா தமிழ்ப் பிரபாகரனை சிங்கள அரசு சர்வதேச வரம்புகளை மீறி கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பிற நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களை தனது நாட்டிற்குள் சிங்கள அரசு அனுமதிக்க மறுக்கிறது என்பது மட்டுமல்ல, அங்கே வரும் செய்தியாளர்களை கைது செய்து சொல்லொண்ணாத கொடுமைகளுக்கு ஆளாக்குகிறது. உடனடியாக இந்திய அரசு இதில் தலையிட்டு தமிழ்ப் பிரபாகரனை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
|