இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் மரணம் - பழ. நெடுமாறன் இரங்கல் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2013 19:00 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் காலமான செய்தியறிய வருந்துகிறேன்.
அரசுப் பணியை விட்டு விலகி தொடர்ந்து வேளாண்மையில் வீரியமிக்க விதைகள், இராசயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு எதிராகவும், இயற்கை வழி வேளாண்மையை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு தொண்டாற்றினார். மக்கள் நலனுக்காக அவர் தன்னலமின்றி தொண்டாற்றிய பாங்கு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இறுதியாக கடந்த 29ஆம் தேதியன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் இறுதியாக அவர் உரையாற்றினார். அதுவே அவரது கடைசி பேச்சு என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரின் மறைவு தமிழக விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். அவருடைய மறைவினால் வருந்தும். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். |