7 பேரையும் விடுதலை செய்ய முன்வந்த முதல்வருக்கு நன்றி - பழ.நெடுமாறன் அறிக்கை |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014 14:52 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், இரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய
தமிழக முதல்வர் மேற்கொண்ட முடிவை வரவேற்று மனமாரப் பாராட்டுகிறேன். உலகத் தமிழர்களின் சார்பில் அவருக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த 7 பேரும் தங்கள் இளமைப் பருவத்தை சிறையிலேயே தொலைத்துவிட்டார்கள். எனவே இவர்கள் புதுவாழ்க்கை அமைத்துக்கொள்ள தேவையான எல்லா உதவிகளையும் தமிழக அரசின் சார்பில் செய்ய வேண்டும் என முதலமைச்சரை வேண்டிக்கொள்கிறேன்.
1998ஆம் ஆண்டில் 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதற்கும் அந்த வழக்கை நடத்துவதற்கும் அமைக்கப்பட்ட குழுவில் அங்கம் வகித்து 16 ஆண்டுகாலமாக தொடர்ந்து அயராது பாடுபட்ட அனைவருக்கும், நிதியுதவி அளித்தவர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். |