நீதித் துறையை அவமதிக்கும் கருணாநிதி! பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014 21:21

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
”இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் குறித்த வழக்கில் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் கூறியிருப்பது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்தது அல்ல . அரசியல் ரீதியான விளைவுகள் இதனால் ஏற்படும்” என தி. மு. க. தலைவர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையே மிரட்டும் வகையில் கருணாநிதி கூறியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென கருணாநிதி முன்னர் பேசியதெல்லாம் ஒப்புக்காகவே என்பது இதன் மூலம் தெரிகிறது. 7 பேரின் வழக்கில் தீர்ப்பு வெளி வருவதை விட அவருக்கு தனது கட்சியின் நலன் பெரிது என கருதுகிறார். இவருடைய தேர்தல் ஆதாயத்திற்காக அந்தத் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டுமென நிர்பந்தம் செய்வது நீதித் துறையை அவமதிக்கும் போக்காகும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.