25 ஆண்டு காலமாக சிங்களச் சிறைகளில் வாடும் தமிழர்கள் : மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 11 நவம்பர் 2015 17:52
25 ஆண்டு காலமாக சிங்களச் சிறைகளில் வாடும் தமிழர்கள்

மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்

இலங்கையில் உள்ள 14 சிறைகளில் 250க்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைக்கப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 பேர் 15 முதல் 24 ஆண்டு காலமாக சிறையில் இருப்பவர்கள். 5 முதல் 15 ஆண்டு காலமாக 212 பேர் சிறையில் இருக்கிறார்கள். எத்தகைய விசாரணையுமின்றி தொடர்ந்து சிறைகளில் வாடும் இவர்கள் அனைவரும் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு 3 நாட்கள் கழிந்துவிட்டன. ஆனாலும் சிங்கள அரசு கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. உலக மனித உரிமை அமைப்புகள் இப்பிரச்சினையில் தலையிட்டு அவர்களை விடுவிக்க உதவ முன்வருமாறு உலக நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் வற்புறுத்த வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.