தமிழர் தேசிய இயக்கத்துக்குத் தடை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:21

1908-ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்திருத்தச் சட்டத்தின் கீழ், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு தமிழர் தேசிய இயக்கம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளதென்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிக்கை 13-08-2002 அன்று வெளியாகியுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாகத் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.