நாள் திருவள்ளுவராண்டு 2047, ஆடவை (ஆனி) 31 கடகம் 1, 2 (2016 சூலை 15, 16, 17) இடம்: அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், தஞ்சை. 15-7-2016 பிற்பகல் 3 மணி மங்கல இசை முழங்க மாநாடு தொடங்கியது. உலகத் தமிழர் பண் இசைக்கப்பட்டது.
5.15 மணிக்கு புலவர் கி.த. பச்சையப்பன் உலகத் தமிழர் பேரமைப்பின் கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார். 5.30 மணிக்கு வரவேற்புக் குழுத் தலைவர் அயனாபுரம் சி. முருகேசன் வரவேற்புரை யாற்றினார். இராமன் தனித் தமிழ் இயக்க நூல்கள் - இதழ்கள் கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றினார். 16-7-2016 காலை 10.00 மணிக்கு மங்கல இசை முழங்கியதை அடுத்து உலகத் தமிழர்பண் இசைக்கப்பட்டது.
நூல்கள் வெளியீட்டு நிகழ்வு
பழ.நெடுமாறன் அவர்கள் இயற்றிய "வள்ளலார் மூட்டிய புரட்சி'' என்னும் நூலை கி.ஆ.பெ. வி. கதிரேசன் வெளியிட்டார், இரா. திருஞானம், கா. தமிழ்வேங்கை, சாமி. காரிகாலன், பழ. இராசேந்திரன், ச. கலைச்செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முனைவர் கு. அரசேந்திரனின் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. "தமிழும் இந்தோ ஐரோப்பிய மொழிகளும்'' என்னும் நூலை முனைவர் அ.வ. இராசகோபாலன் வெளியிட்டார். துரை. மதிவாணன், புலவர் இரத்தின வேலன், தி.மா. பழநியாண்டி, உதயகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
"தொல்காப்பியர் வேர்ச்சொல் ஆய்வு நோக்கு'' என்னும் நூலை தஞ்சை அ. இராமமூர்த்தி வெளியிட்டார். கு.செ. வீரப்பன், சி.சி. சாமி, மு. இராசா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
"பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் இந்தோ ஐரோப்பிய உறவு'' என்னும் நூலை தஞ்சை-இராமமூர்த்தி வெளியிட குழ. பால்ராசு, ஆவல் கணேசன், சிமியோன் சேவியர், இராசா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சு. சவுந்திரபாண்டியன் வழக்கறிஞர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்.
கருத்தரங்கம் அமர்வு - 1
"மொழித் தூய்மைக் கோட்பாடும் இயக்கங்களும்'' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியது. முதுமுனைவர் இரா. இளங்குமரனார் தலைமையேற்று உரையாற்றினார். முனைவர் வீ. அரசு தொடக்கவுரையாற்றினார். "மொழித்தூய்மைக் கோட்பாடும் அதன் காரணிகளும்'' என்னும் தலைப்பில் முனைவர் கு. திருமாறன் உரையாற்றினார். "இந்திய மொழிகளில் மொழித்தூய்மை இயக்கங்கள்'' என்னும் தலைப்பில் முனைவர் அமுதன் அடிகள், "மொழித்தூய்மை இயக்கங்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள்'' என்னும் தலைப்பில் கி. வெற்றிச்செல்வன், "தனித்தமிழில் பெயர் வைத்தல்'' என்னும் தலைப்பில் புலவர் க. தமிழமல்லன் உரையாற்றினார். இறுதியாக தனித்தமிழ் பாடகர் சமர்ப்பா தமிழிசை முழங்கினார். பா. இறையெழிலன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்.
கருத்தரங்கம் அமர்வு - 2
"தனித்தமிழ் இயக்க முன்னோடிகள்'' என்னும் தலைப்பில் நடைபெற்றது. புலவர் க. முருகேசன் தலைமையுரையாற்றினார். அன்புவாணன் வெற்றிச்செல்வி தொடக்கவுரையாற்றினார். அறிஞர் எல்லீசு பற்றி முனைவர் கி. சூசை, கால்டுவெல் பற்றி புலவர் கதிர். முத்தையன், பாம்பன் அடிகள் பற்றி முனைவர் பி. தமிழகன், பரிதிமாற்கலைஞர் பற்றி முனைவர் தா. மணி ஆகியோர் உரையாற்றினர். புலவர் ஆ. நெடுஞ்சேரலாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்.
மறைமலையடிகள் விருது
தனித்தமிழ் கொள்கைக்காக உழைத்த தமிழ்ச் சான்றோருக்கு "மறைமலையடிகள் விருது'' வழங்கி சிறப்புச் செய்யப்பட்டது.
உணர்ச்சிப் பாவலர் காசி. ஆனந்தன் தலைமையேற்றார். ஓவியர் வீரசந்தானம் முன்னிலை வகித்தார். இருவரும் உரையாற்றினர்.
பேரா. கு. பூங்காவனம் - வெங்காலூர், புலவர் கி.த. பச்சையப்பன்- சென்னை, புலவர் துரை. மதிவாணன்-புதுக்கோட்டை, க. குழந்தைவேலன் -நாமக்கல், நெல்லை இளங்கண்ணன், இறையடியான், வை.மு. கும்பலிங்கன்-குடந்தை, பெ. மணியரசன்-தஞ்சை, பேரா. பா. இறையரசன் -சென்னை, முனைவர் தே. மணி-சென்னை, வீரசிங்கம் தஞ்சை, பொறிஞர் மருதநாடன், அரங்கராசன், புலவர் அண்டிரன், புலவர் மாலிறையன், பொள்ளாச்சி நசன், பாவலர் முல்லைவாணன் -சீர்காழி, பொறிஞர் தமிழநம்பி, செந்தமிழ்க்கோ பா. இறையெழிலன் ஆகியோருக்குக் கேடயமும் பட்டாடையும் போர்த்திச் சிறப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்வினை பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி ஒருங்கிணைத்து வழங்கினார்.
கருத்தரங்கம் அமர்வு -3
தனித் தமிழியக்கத் தோற்றமும் வளர்ச்சியும்'' என்னும் நிகழ்வுக்கு திரு. சி. அறிவுறுவோன் தலைமையேற்று உரையாற்றினார். திருவாட்டி இறை.பொற்கொடி தொடக்கவுரையாற்றினார்.
"மறைமலையடிகளும் தனித்தமிழ் இயக்கமும்'' என்னும் தலைப்பில் இளங்கண்ணன் உரையாற்றினார். மறை தி. தாயுமானவன் "நீலாம்பிகை அம்மையும் தனித்தமிழ் இயக்கமும்'' என்னும் பொருள் பற்றியும் "பாவாணரும் தனித் தமிழியக்கமும்'' என்னும் பொருளில் பேரா. கு. பூங்காவனம், "பாவேந்தரும் தனித் தமிழ் இயக்கமும் பற்றி முனைவர் ய. மணிகண்டன் "பாவலரேறும் தனித் தமிழியக்கமும்'' பற்றி முனைவர் மா. பூங்குன்றன் "தனித்தமிழ் இயக்க வழித் தோன்றல்கள்'' பற்றி முனைவர் மு. இளமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
"உலகப் பெருந்தமிழர் விருது''
தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் பேரா. ம.இலெ. தங்கப்பா, முனைவர் இரா. மதிவாணன் பேரா. ப. அருளி ஆகியோரை மேளதாளம் முழங்க ஊர்வலமாக மக்கள் இணைந்து அழைத்துவந்து அரங்கில் அமரவைத்து உலகப் பெருந்தமிழர் விருது வழங்கி, பட்டாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் ஏற்புரை வழங்கினர். |