உலகத் தமிழர் பேரமைப்பு 9ஆவது மாநாடு முனைவர் செ.வை. சண்முகம், பேரா. செ.வைத்தியலிங்கன், முனைவர் சோ.ந. கந்தசாமி, முனைவர் இராம. சுந்தரம் உலகப் பெருந்தமிழர் விருது பெற்றனர்! - பா. இறையெழிலன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016 12:40

உலகத் தமிழர் பேரமைப்பு 9ஆம் மாநாடு
மூன்றாம் நாள் முற்பகல் மங்கல இசை முழங்கப்பட்டது. அடுத்து உலகத் தமிழர் பண் இசைக்கப்பட்டு விழா தொடங்கப்பட்டது. பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி வரவேற்புரையாற்றினார்.

கருத்தரங்கம் அமர்வு-1

"தமிழர் மெய்யியல் சிந்தனைகள்'' நிகழ்வுக்கு பேரா. க. நெடுஞ்செழியன் தலைமையேற்று உரையாற்றினார். கரு. ஆறுமுகத் தமிழன் தொடக்கவுரையாற்றினார்.

"திருக்குறள்'' சிந்தனைபற்றி மரு. மு. செம்மல் அவர்களும், "திருமூலர்'' சிந்தனைபற்றி முனைவர் இரா. கலியபெருமாள் அவர்களும் "கம்பர்'' சிந்தனைகள் பற்றி முனைவர் கு. அரசேந்திரன் அவர்களும் "வள்ளலார்'' சிந்தனைகள் பற்றி பேரா. இறையரசன் அவர்களும் உரையாற்றினர்.
நிகழ்ச்சியை பா. இறையெழிலன் ஒருங்கிணைத்து வழங்கினார்.

மலர் வெளியீடு

தமிழ்க் கலைமாமுகில் முனைவர் ம. நடராசன் மாநாட்டு "தன்னேரிலாத்தமிழ்'' மலரை வெளியிட்டார்.
திருவாளர்கள் த. மணிவண்ணன், மரு. பாரதிச் செல்வன், சதா. முத்துக்கிருட்டிணன், நா. வைகறை, மு. முருகையன், பேரா. முரளிதரன், இலெ. மாறன், பொறி. வின்சென்ட் பிரபாகரன், ஈரோடு கி. தட்சிணாமூர்த்தி, பொறி. தி. இராசசேகரன், செயப்பிரகாசு, புலவர் அ. இருதயராசு, புலவர் துரை. மதிவாணன், மேலும் சிலரும் மாநாட்டு மலரைப் பெற்றுக் கொண்டனர்.

அடுத்து இலரா. கலைக்கூடம் வழங்கும் "அடிடா அடிடா தமிழ்ப்பறையை'' என்னும் குறுந்தகட்டை செ.ப. முத்தமிழ்மணி வெளியிட்டு உரையாற்றினார். குறுந்தகட்டினை ஆத்மநாதன், கண். இளங்கோ, ஆனந்து, மன்னை இராசசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மகளிர் அரங்கம்

"பிறமொழி மயக்கம்'' என்னும் தலைப்பில் வழக்குரைஞர் த. பானுமதி தலைமையேற்று உரையாற்றினார். புனிதா கணேசன் தொடக்கவுரை யாற்றினார். தமித்தலட்சுமி, பூங்குழலி, அ.தேன்மொழி வழக்குரைஞர் இறை. அங்கயற்கண்ணி ஆகியோர் உரையாற்றினர். முனைவர் வி. பாரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்.

கருத்தரங்கம் அமர்வு - 2

"தமிழர் வரலாற்றில் புதிய தடயங்கள்'' என்னும் நிகழ்வுக்கு முனைவர் அர. பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். முனைவர் க. குழந்தைவேலன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். "சிந்து சமவெளிநாகரிகம்'' பற்றி பூரண சந்திர சீவா, "பூம்புகார்'' பற்றி முனைவர் அதியமான் "வைகைக் கரை நாகரிகம்'' பற்றி முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணன் "திரைகடலோடிய தமிழரின் தொன்மை'' பற்றி ஒரிசா பாலு, "தமிழ் எழுத்துகளின் தொன்மை'' பற்றி முனைவர் கு. இராசவேலு ஆகியோர் உரையாற்றினார்.
பா. இறையெழிலன் நிகழ்வை ஒருங்கிணைத்து வழங்கினார்.

உலகப் பெருந்தமிழர் விருது வழங்கல்

முனைவர் செ.வை. சண்முகம், பேரா. செ. வைத்தியலிங்கன், முனைவர் சோ.ந. கந்தசாமி, முனைவர் இராம. சுந்தரம் ஆகியோருக்கு "உலகப் பெருந் தமிழர் விருது' கேடயம் வழங்கியும், பட்டாடை அணிவித்தும் சிறப்புச் செய்யப்பட்டது.

மூவரும் தங்களின் ஏற்புரையை வழங்கினர். பொன். வைத்தியநாதன் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வை இயக்குநர் வ. கெளதமன் ஒருங்கிணைத்து வழங்கினார்.

பொறியாளர் கென்னடி அவர்கள் மாநாட்டின் ஏற்பாடுகள் அனைத்தும் மிகச்சிறப்பாக ஒழுங்குபடுத்திச் செயற்படுத்தினார். பின்னர் மாநாட்டில் செயலாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

"மறைமலையடிகள் விருது' புலவர் இரத்தினவேலன் அவர்களுக்கும் புலவர் கி.த. பச்சையப்பன் அவர்களுக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டனர். மாநாட்டுத் தீர்மானங்களை பொறிஞர் கென்னடி படித்தார். அரங்கில் உள்ள அனைவரும் கையொழி எழுப்பி இசைவளித்தனர்.

பொது அரங்கம்

தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையேற்று அனைத்து நிகழ்வுகளையும் உள்ளடக்கி விரிவாகவும் விளக்கமாகவும் உரை நிகழ்த்தினார். முனைவர் கு. வேலன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
அடுத்து, திருவாளர்கள் பெ. மணியரசன், இரா. காமராசு, நாஞ்சில்நாடன், மா. பொழிலன், தமிழ்நேயன், முனைவர் த. செயராமன், மலேசியா க. ஆறுமுகம், அருள் தந்தை பாலு, திரைப்பட இயக்குநர்
வே. சேகர், கா. பரந்தாமன், வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த. வெள்ளையன், இறையடியான் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியை இயக்குநர் வ. கெளதமன் ஒருங்கிணைத்து வழங்கினார்.

மூன்று நாள்களிலும் வந்திருந்த அனைவருக்கும் தங்கு தடையின்றி மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. இறுதியாக உலகத் தமிழர் பண் இசைத்து மாநாடு இனிதே முடிவுற்றது.

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9ஆவது மாநாடும் மிகச்சிறப்பாக நடைபெற்றன. மாநாட்டு கருத்தரங்குகளில் உரையாற்றிய அறிஞர் பெருமக்களை மிக்கப் பெருமையோடு பாராட்டுகிறோம். மாநாட்டில் பங்காற்றி உழைத்த பொறிஞர் கென்னடி முதலான முள்ளிவாய்க்கால் தோழர்கள் அனைவரையும் நன்றியோடு பாராட்டுகிறோம். "தன்னேரில்லாத் தமிழ்'' என்னும் பெயரில் அமைந்த மாநாட்டு மலர் சிறப்பான முறையில் வெளிவர உழைத்த மலர்க்குழு பெருமக்களுக்கும் மூன்று நாள்களும் சிறப்பாக உணவு தயாரித்து வழங்கிய உணவுத் தயாரிப்புக் குழுவினருக்கும், தனித்தமிழ் இயக்க நூல்கள், இதழ்கள் கண்காட்சியையும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றப் பின்புலத்தோடு வடிவாக அமைத்து வழங்கிய பொறியாளர் கென்னடி முதலான தோழர்களுக்கு மிகுந்த பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம். தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு மாநாட்டில் மூன்று நாள்களும் வந்திருந்து மாநாட்டினைச் சிறப்பித்த தனித்தமிழ் அறிஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் தமிழ் அமைப்புத் தோழர்களுக்கும் பெருமக்களுக்கு வரவேற்புக் குழுவின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். நிகழ்ச்சி இரவு 12.30 மணிக்கு நிறைவுற்றது.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.