சத்தமே இல்லாமல்... - தமித்தலட்சுமி தீனதயாளன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:23

கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் நினைவாக
தந்தைக்குள்ளே
தாயாகி
தாலாட்டு பாடினாய்!
சிந்தையெல்லாம்
தமிழாகி
கவிதை கூட்டினாய்!

எளிமையே
வலிமையென்று
வழக்கம் காட்டினாய்!
புலமையோடு
தமிழ்பாடி
மயக்கம் ஊட்டினாய்!
வித்தக
விரல்களிலே
புத்தகங்கள் மீட்டினாய்!
சத்தமே
இல்லாமல் - ஏன் நீ
சாவைத் தேடினாய்!

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.