சென்னை, தஞ்சை, மதுரையில் செப்டம்பர் 24 ஆம் நாள் தமிழர் தேசிய முன்னணியின் ஆர்ப்பாட்டம்-தமிழர்களே பங்கேற்பீர்! |
|
|
|
சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2016 12:56 |
தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்கள் முகாம்கள் என்ற பெயரில் எவ்வித உரிமைகளும் இல்லாமலும் போதுமான உணவு மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமலும், குழந்தைகளுக்கு போதுமான கல்வி வசதி இல்லாமலும், வெளியே சென்று வேலை பார்க்க அனுமதிக்கப்படாமலும் சொல்லொணாத துன்பங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதற்குக் காரணம் ஐ.நா. ஏதிலியர் பட்டயத்தில் இந்திய அரசு கையெழுத்திட மறுத்து வருவதால் இவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் என இந்திய அரசு கூறுகிறது.
அதே போல தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு போர் முடிந்த பிறகு விடுதலைப் புலிகள் என குற்றம் சாட்டப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்கள் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் சிறையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தடுப்பு ஊசி போடுவது என்ற பெயரால் கொடிய கொலை ஊசி அவர்களுக்குப் போடப்பட்டு, அதன் விளைவாக நூற்றுக்கணக்கானவர்கள் மர்மமான முறையில் இறந்து இருக்கிறார்கள் என வடக்கு மாநில முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கண்ட இரண்டு செய்திகளும் தமிழக மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கியிருக்கின்றன. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கிறது. எனவே, அவர்களின் கவனத்தை இப்பிரச்சினைகளில் ஈர்ப்பதற்காக தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் செப்டம்பர் 24ஆம் நாள் சனிக்கிழமை அன்று பின்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்
- தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் ஏதிலியர் உரிமையுடன் வாழ ஐ.நா. ஏதிலியர் பட்டயத்தில் இந்திய அரசே கையெழுத்திடு!
- தமிழீழத்தில் போருக்குப் பின் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நச்சு ஊசி, நஞ்சு கலந்த உணவு ஆகியவை கொடுக்கப்பட்டதின் விளைவாக நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். இதைக் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையமே விசாரணை நடத்துக.
|