காவிரி-அனைத்துக்கட்சி - அனைத்து உழவர் சங்கங்களின் போராட்டம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:17

மயிலாடுதுறை

16-09-2016 அன்று தமிழகம் எங்கும் அனைத்துக்கட்சிகள், அனைத்து உழவர் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டங்களிலும் தமிழர் தேசிய முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றார்கள். விவரம் வருமாறு:

மயிலாடுதுறையில் நடைபெற்ற கண்டன ஆாப்பாட்டத்தில் பேராசிரியர் முரளிதரன் தலைமை தாங்கினார். க. இராசவேல், கவிஞர் பூதி, இரா. புசுபராசு, ப. சுகுமாறன், வினோத், பால்ராசு, சாமி. சங்கர்,
கோ. மாதவன், க. இராசேந்திரன் ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

இரசீத்கான், அஞ்சான் முரளி, அய்யா. சுரேசு, தெ. மகேசு மற்றும் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத் தலைவர் எஸ். இராமு தலைமையில் திரளானவர்களும், சிலம்பு பகுதி ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் எஸ்.ஆர். சிவசண்முகம் தலைமையில் திரளனவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மதுரை

16/09/2016 அன்று தல்லாகுளம் மத்திய அரசின் தந்தி அலுவலகம் முன்பாக கன்னடர் கர்நாடகத்தில் நடத்திய வெறியாட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெ.ந.கணேசன் தலைமை தாங்கினார். கா. பரந்தாமன், மதச்சார்பற்ற ஜனதா தளம் க. ஜான்மோசஸ், தமிழ் தேசிய பேரியக்க மாநகர் மாவட்டச் செயலாளர் ரெ.ராசு, புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன், பேராசிரியர் கு. வேலன், ச. பிச்சைக்கணபதி ஆகியோர் உரையாற்றினார்.

பு. திரவியம், மு. கருப்பையா, கெ. இராமசுப்பு, இரா. தமிழ்மறவன், சீ. வீராச்சாமி, பி.எம். அன்சாரி, கே. பஞ்சவர்ணம், முருகேசன், கரிகாலன், கதிர்நிலவன், சிவக்குமார், அழகர்சாமி, ஆரோக்கியமேரி, புருசோத்தமன், சம்பவாவி, குணசேகரன், சு. தமிழன்பன் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். புதூர் தி. முருகன் நன்றியுரையாற்றினார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.