ஒற்றெழுத்தின் சிறப்பு! குடந்தை வய்.மு. கும்பலிங்கன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:51 |
தமிழுக்கே உள்ள தனிச்சிறப்பு ஒற்றெழுத்தாகும். மேற்மொழிகள் அனைத்திலும் இவ்வகையான ஒற்றெழுத்துகள் கிடையாது. பிற மொழிகளில் சொல்லும் சொல்லும் சேர்ந்தால் சொற்றொடர் அமைந்துவிடும். தமிழில் மட்டுமே சொல்லும் சொல்லும் இணையும்போது இடையிலே ஒற்றெழுத்து சேரும் - அமையும் - கூடும். இதை நான் பசை எழுத்து என்றும், ஒட்டு எழுத்து என்றும் சொல்லுவேன். ஒற்று வந்தால் ஒரு பொருள், ஒற்று வரவிலை எனில் பிறிதொரு பொருள் என அமையும். ஒற்றால் விளையும் அந்தச் சொல் வேறுபாட்டை - பொருள் வேறுபாட்டை இங்குப் பார்ப்போம்
1. கீரைக்கடை - கீரை விற்கும் வியாபாரக் கடை கீரைகடை - சாப்பிடுவதற்குக் கீரையைக் கடை 2. அரிசிக் கடை - அரிசி விற்கும் வியாபார நிலையம் அரிசி கடை - அரிசியைக் கடை, அரிசியை ஆட்டு 3. ஆடிப்பெருக்கு - ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுக்கும் ஒரு திருவிழா, பதினெட்டாம் பெருக்கு ஆடி பெருக்கு - நடனம் ஆடிக் கொண்டே பெருக்கு அல்லது கூட்டு 4. கடைச்சரக்கு - மட்டமான பொருள் (அ) சரக்கு கடை சரக்கு - கடையில் இருக்கும் பொருள் 5. நகைக் கடன் - நகைக்குக் கடன் தரப்படும் நகை கடன் - நகை கடனாகத் தரப்படும் 6. பூட்டுச்சாவி - பூட்டுக்கான சாவி பூட்டு சாவி - பூட்டும், சாவியும் (உம்மைத் தொகை), பூட்டும் சாவி, பூட்டுகிற சாவி, பூட்டிய சாவி (வினைத் தொகை) 7. கைம்மாறு - நன்றி செலுத்துதல் கை மாறு - ஒரு பொருள் கை மாறுதல் 8. உடும்புப் பிடி - உடும்பைப்போல அழுத்திப்பிடி உடும்பு பிடி - உடும்பைப் பிடி 9. கடைப்பிடி - பின்பற்று, ஒழுகு, செய் கடை பிடி - வாடகைக்கு ஒரு கடை எடு-பிடி 10. மலர்க் கொத்து - மலரால் ஆன கொத்து மலர் கொத்து மலரும், கொத்தும் (உம்மைத் தொகை) மலர்ந்த கொத்து, மலர்கின்ற கொத்து-மலரும் கொத்து (வினைத் தொகை)
- தொடரும் |