தமிழர் தேசிய முன்னணி தலைமைச் செயற்குழுக் கூட்டம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 17:10

24---09--2016 சனிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு சென்னைத்தலைமை அலுவலகத்தில் - தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழு - மாவட்டத்தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்கீழ்க்கண்ட முடிவுகள்எடுக்கப்பட்டன.

1. தமிழகத்தில் நடைபெறவிருக்கிறஉள்ளாட்சித் தேர்தல்களில் ஈடுபடுவது என இச்செயற்குழு முடிவு செய்கிறது.

2. தங்கள் மாவட்டத்திற்குஅத்தாட்சி வழங்கும் அதிகாரம் படைத்தவராகக் கீழ்க்கண்ட பொறுப்பாளர் நியமிக்கப் பட்டிருக்கிறார். உடனடியாக அவருடன் தொடர்பு கொண்டு வேட்பாளர்களுக்குரிய அத்தாட்சிக் கடிதங் களைப் பெற்று தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டுகிறேன். வேட்பாளர் பட்டியலின் நகல் ஒன்றினைத் தலைமை நிலையத்திற்கு அனுப்பி வைக்கும்படி மாவட்டத் தலைவர்களை வேண்டுகிறேன்.

3. மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கைக்கு இணங்க வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களுடன் பொறுப்பாளரிடமிருந்து கிடைத்த அத்தாட்சிக் கடிதத்தையும் இணைத்துத் தேர்தல் அதிகாரியிடம் அளிக்க வேண்டும். அதற்கிணங்க அத்தாட்சிக் கடிதங்களை வழங்கக் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்குக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

பெயர் பதவி மாவட்டங்கள்

1. கா. பரந்தாமன் பொதுச்செயலாளர் மதுரை, நெல்லை மாநகர்கள், மதுரை, தேனி, திண்டுக்கல்,இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி

2. செ.ப. முத்தமிழ்மணி பொதுச்செயலாளர் சென்னை மாநகரம், திருவள்ளூர்,
காஞ்சிபுரம்

3. ம. பொன்னிறைவன் துணைத்தலைவர் திருச்சி மாநகர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை

4. சி. முருகேசன் பொதுச்செயலாளர் தஞ்சை,திருவாரூர், நாகை

5. ந.மு. தமிழ்மணி பொதுச்செயலாளர் புதுவை, கடலூர்,
விழுப்புரம்

6. க. தமிழ்வேங்கை மாநில இளைஞர் அணி கோவை, சேலம்
அமைப்பாளர் மாநகர்கள், கோவை,
நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.