பத்திரிகைகள் பாராட்டுகின்றன! |
|
|
|
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 10:55 |
தினமணி 22-8-2016
திருவருட்பிரகாச வள்ளலாரை ஓர் ஆன்மீகவாதியாக மிகப்பெரிய ஞானியாக மட்டுமே அறிந்து வைத்துள்ளவர்களுக்கு அவரை மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக, மனிதநேயப் பண்பாளராக, மொழிப்பற்றாளராக இன்னும் பல்வேறு கோணங்களில் அவரது அருமை பெருமைகளை இந்நூலின் வாயிலாக எடுத்தியம்பி இருககிறார் பழ.நெடுமாறன்.
தினத்தந்தி 03-8-2016
150 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயத்தில் நிலவிய சாதிப் பூசல்களையும், சமய வேறுபாடுகளையும் சாடியவர், "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய சீரிய சிந்தனையாளர், உருவமற்ற வழிபாட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தவர், சமரச சன்மார்க்கம் கண்டவர், தமிழக சீர்திருத்தவாதிகளில் முன்னோடி, எளிய உரைநடையாலும் பாடல்களாலும் மக்களைக் கவர்ந்தவர், வள்ளலார். அவரது வரலாற்றை பழ.நெடுமாறன் அழகுற இந்த நூலில் விவரித்துள்ளார்.
இந்து 30-7-2016
வள்ளலாரைப் பற்றி பழ.நெடுமாறன் எழுதியுள்ள இந்நூல் இராமலிங்க அடிகள் குறித்து இந்தத் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. சாதி, சமயப் பூசல்களை ஒழித்த சமதர்ம சமுதாயம் அமைக்க வள்ளலார் முயன்ற வரலாற்றை மிக எளிமையாக இந்நூல் எடுத்துரைக்கிறது. வள்ளலார் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு அவரைப் பற்றிய செய்திகளை அக்கறையுடன் தெரிவிக்கும் விதம் நன்று. |