ஒற்றெழுத்தின் சிறப்பு! குடந்தை வய்.மு. கும்பலிங்கன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 11:06

தமிழுக்கே உள்ள தனிச்சிறப்பு ஒற்றெழுத்தாகும். மேற்குமொழிகள் அனைத்திலும் இவ்வகையான ஒற்றெழுத்துகள் கிடையாது. பிற மொழிகளில் சொல்லும் சொல்லும் சேர்ந்தால் சொற்றொடர் அமைந்துவிடும். தமிழில் மட்டுமே சொல்லும் சொல்லும் இணையும்போது இடையிலே ஒற்றெழுத்து சேரும் - அமையும் - கூடும். இதை நான் பசை எழுத்து என்றும், ஒட்டு எழுத்து என்றும் சொல்லுவேன். ஒற்று வந்தால் ஒரு பொருள், ஒற்று வரவிலை எனில் பிறிதொரு பொருள் என அமையும். ஒற்றால் விளையும் அந்தச் சொல் வேறுபாட்டை - பொருள் வேறுபாட்டை இங்குப் பார்ப்போம்

 

  • புகைப்பிடிக்காதே - சிகரெட் குடிக்காதே
  • புகை பிடிக்காதே காற்றில் கலந்து வரும் அந்தப் புகையைப் பிடிக்காதே
  • கைக்காசு - கையில் இருக்கும் காசு
  • கை காசு கையும், காசும் (உம்மைத் தொகை)
  • யானைப் பாகன் - யானையை மேய்ப்பவன்
  • யானை பாகன் யானையும், பாகனும் (உம்மைத் தொகை)
  • விறகுக்கரி - விறகால் ஆன கரி, விறகு எரிந்த கரி
  • விறகு கரி விறகும், கரியும் (உம்மைத் தொகை)
  • முத்துச்சிப்பி - முத்து உள்ள சிப்பி
  • முத்து சிப்பி முத்தும், சிப்பியும் (உம்மைத் தொகை)
  • காந்திப் பூங்கா - காந்தியின் பெயரில் அமைந்த பூங்கா
  • காந்தி பூங்கா காந்தியும், பூங்காவும் (உம்மைத் தொகை)
  • வாய்ப்பாடு - வாயின் வெளிப்புறம், வாயின் விளிம்பு
  • வாய்பாடு இலக்கணம், சூத்திரம் கொள்கை
  • தங்கப்பலகை - தங்கத்தால் ஆன பலகை- இருக்கை
  • தங்க பலகை தங்குவதற்கான பலகை

 

  • தெருப்பாதை - தெருவின் பாதை
  • தெரு பாதை தெருவும் பாதையும் (உம்மைத் தொகை)
  • புதுமனைப் புகும் விழா - புதியதாகக் கட்டப்பட்ட வீட்டில்
  • நாம் குடிபுகும் விழா
  • புதுமனை புகும் விழா புதியதாகக் கட்டப்பட்ட வீடு எங்கோ
  • ஓடி ஒளிந்து புகுந்து கொள்ளும் விழா
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.