குர்த் இன விடுதலைப் போராட்டத் தலைவர் அப்துல்லா ஓசலான் எழுதிய ிஃடிஞஞுணூச்tடிணஞ் டூடிஞூஞு : ஙிணிட்ச்ணீண் கீஞுதிணிடூதtடிணிணீ நூலின் தமிழ் மொழிப் பெயர்ப்பு "சிறகு விரிக்கும் வாழ்வு : பெண்ணின் புரட்சி' என்ற தலைப்பில் தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் வெளியிடப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளும் குர்த் விடுதலைப் போராட்ட இயக்கமான குர்த் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்ட நாளுமான நவம்பர் 27 அன்று,அதிலும் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பூங்குழலி மொழிப் பெயர்த்துள்ள இந்நூலை பிரக்ஞை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
20-08--09-இல் போர் தீவிரமாக நடைபெற்ற போது வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தில் பணியாற்றியவரும் இலங்கையின் தமிழினப் படுகொலையில் உயிர் பிழைத்த தனது அனுபவங்களை "எனது நாட்டில் ஒரு துளி நேரம்' என்ற நூலில் பதிவு செய்தவருமான டாக்டர் ந. மாலதி இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். ஈழக் களத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் நடை முறைப்படுத்தப்பட்ட பெண்ணிய சிந்தனைகளுக்கும் ஓசலானின் சிந்தனைகளுக் கும் உள்ள பொருத்தப்பாட்டை விளக்கியுள்ளார். அதே போல மொழிப்பெயர்ப் பாளர் பூங்குழலி தனது முன்னுரையில் ஓசலானின் சிந்தனைகள் பெருமளவுக்கு பெரியாரின் பெண்ணிய சிந்தனைகளுடன் ஒத்திருப்பதை விளக்கியிருக்கிறார்.
கக்கூஸ் ஆவணப்பட இயக்குநரும் சமூக செயற்பாட்டாளருமான சி. பி. அய். எம். எல். கட்சியைச் சேர்ந்த திவ்யா நூலை வெளியிட்டு உரையாற்றினார். தனது களப்பணியில் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்த தனது நேரடி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர் ஓசலானின் கருத்துக்கள் கொண்ட இந்நூல் முற்போக்கு செயற்பாட்டாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஆவணம் என்று குறிப்பிட்டார்.
மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பினைச் சேர்ந்த களப்பணியாளர் சித்ரா நுலைப் பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்தினார். மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் களத்தில் பெண்கள் எவ்வாறு முன்னின்று போராடினார்கள் என்பதை நினைவு கூர்ந்த சித்ரா, ஓசலானின் கருத்துக்களை எங்கெல்சின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு விரிவானதொரு உரை நிகழ்த்தினார்.
பிரக்ஞை பதிப்பகத்தின் விலாசினி நன்றியுரையாற்றினார். பொறியாளர் கென்னடி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
பேசிய அனைவருமே குர்த் இன விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை குறிப்பிட்டனர். இந்நூல் வெளியீடு என்பது இரு விடுதலைப் போராட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான தளத்தை உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டனர். |