சிறையில் முகிலன் பட்டினிப் போராட்டம்! |
|
|
|
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:30 |
ஓ.பி.எஸ் செய்த ஊழல்களைப் பட்டியலிட்டு தேர்தல் பிரசார நேரத்தில் அவருக்கு எதிராகப் போடியில் துண்டுப் பிரசுரம் வழங்கிய முகிலன், காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு தற்போது மதுரை சிறையில் அடைபட்டிருக்கிறார்.
மதுரை சிறையில் அவரைச் சந்தித்துவந்த "நாணல் நண்பர்கள்' இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள், "தமிழகத்தில் முறைகேடாக மணல் அள்ளப்படுவதில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொடர்பு உண்டு. அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று போடியில் துண்டு பிரசுரம் வினியோகித்தார் தோழர் முகிலன். பிரசுரம் வழங்குவது சட்ட விரோதம் அல்ல... இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஓ.பி.எஸ் தரப்பு, போடி நகர காவல் துறையை ஏவி அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்த அராஜகத்தைச் செய்த காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஓ.பி.எஸ்-.ஸை கைதுசெய்யக் கோரியும் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 9-ம் தேதி பட்டினிப் போராட்டம் நடத்தினார் முகிலன். அப்போது அவரை கைதுசெய்து மதுரை சிறையில் அடைத்தனர். ஆனால், கோரிக்கைகளை வலியுறுத்தி சிறையிலும் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினர். |