வைகை நாகரிகத்தை மறைக்க முயற்சி: மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பழ.நெடுமாறன், தா. பாண்டியன் மற்றும் தலைவர்கள் பங்கேற்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017 16:43

2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வைகைக் கரை நாகரிகம் குறித்த அகழ்வாராய்ச்சிகளை தடுத்து நிறுத்த மத்திய பா.ச.க. அரசு செய்துவரும் முயற்சிகளுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் 10-4-2017 அன்று காலை 10 மணி அளவில் புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான தா. பாண்டியன் கலந்துகொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினார்.


வெ.ந. கணேசன், எம்.ஆர். மாணிக்கம், ச. பிச்சைக்கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கா. பரந்தாமன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மதுக்கூர் இராமலிங்கம், விஜயராஜன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா. ஜெயராமன், சரவணன், மதச்சார்பற்ற சனதா தள பொதுச் செயலாளர்க. ஜான்மோசஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிச் செயலாளர் பா. கதிரேசன், தமிழ்த்தேசப் பேரியக்கச் செயலாளர் ரெ. இராசு, புரட்சிக்கவிஞர் பேரவை அமைப்பாளர் பி. வரதராசன், பேராசிரியர் கு. வேலன் உட்பட பலர் உரையாற்றினார்கள்.

தமிழர் தேசிய முன்னணியின் மாநில நிருவாகிகளான சி.சி. சாமி, கு.செ. வீரப்பன், தி. பழனியாண்டி, ம. பொன்னிறைவன், கா. அய்யநாதன், சி. முருகேசன், ந.மு. தமிழ்மணி, லெ. மாறன், கண். இளங்கோ, தி. நெடுமான், கா. தமிழ்வேங்கை மற்றும் மாவட்டத் தலைவர்களான இரா. பாரதிசெல்வன், இரா. அரங்கநாடன், சு.ப. தமிழ்மாறன், அ.இரா. பாலசுப்பிரமணியன்,சி. பசுமலை, அருணா சுந்தரராசன் மற்றும் முள்ளிவாய்க்கால் முற்றம் செயலாளர் ஜான். கென்னடி உட்பட திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநகர் தலைவர் வெ.ந. கணேசன், செயலாளர் தி. முருகன் மற்றும் தோழர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.