தமிழ் பக்தியின் மொழி - மா. க. ஈழவேந்தன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00

எங்கும் நிறைந்தவன் இறைவன். எல்லாம் வல்லவன் இறைவன் என்று பேசுகிறோம். அந்த கடவுளுக்கு தமிழ் தெரியுமா? என்று கேட்கும் நிலையில் இன்னும் சில தமிழர்கள் இருப்பதை எண்ணி ஏங்குகிறோம்.

செந்தமிழ் உடல் சிவநெறி உயிர் என்கிறோம். ஆனால் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழைக் காண்பது அரிதாக இருக்கிறது. திராவிடக் கட்டிடக்கலை , திராவிட சிற்பம், திராவிட ஓவியம் என்றெல்லாம் பெருமை பேசுகின்ற நாம் அதே கோயிலில் தமிழுக்கு இடம் இல்லையென்றால் இதன் பொருள் என்ன? கோயில் பெரிது. கோபுரம் பெரிது. சிவலிங்கம் பெரிது. நந்தி பெரிது. அக்கோயிலைக் கட்டிய மன்னனின் உள்ளமும் பெரிது என்று தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் பெருமையோடு பேசுகிறோம். ஆனால் அங்கும் அரைகுறையாகத்தான் தமிழொலி கேட்கிறது.

படையெடுத்த கிறித்தவம் பைந்தமிழில் வழிபடுகிறது. ஆனால் இங்கு வருகை தந்த கிறித்தவர்கள் தங்கள் வழிபாட்டினை முதலில் கீபுறுவில் நடத்தினார்கள். பின்பு இலத்தீனில் வழிபட்டார்கள். இதையடுத்து our father in heaven என்று ஆங்கிலத்தில் வழிபட்டார்கள். ( விண்ணுலகில் வீற்றிருக்கும் இறைவன் என்பது இதன் பொருள் ). பின்பு காலத்தின் கருத்தோட்டத்திற்கு அமைய "பரம மண்டலத்திலுள்ள பிதாவே எம்மை இரட்சித்து அருளும்' என்று வடமொழி கலந்த தமிழில் வழிபாடு செய்தனர். பின்பு மேலும் தெளிவு பெற்ற நிலையில் இன உணர்வும் மொழி உணர்வும் தலை தூக்க "விண்ணுலகில் வீற்றிருக்கும் ஆண்டவா எம்மை ஆட்கொண்டருளும்' என்று வழிபடுகின்றனர். இம் மாற்றத்திற்கு தமிழால் உலகாண்ட தனிநாயக அடிகளார் முக்கிய காரணம்.

தனிநாயக அடிகள்

உலக மொழிகள் பலவற்றைப் பயின்றதனால் ஒவ்வொரு மொழியின் சிறப்புக்களையும் அடிகளார் கண்டு மகிழ்ந்ததுண்டு. ஆனால் பக்திக்குரிய மொழியாக தமிழே விளங்குவதை உணர்ந்து பின்வரும் முறையில் தமிழின் தனிச் சிறப்பினை எடுத்துக் கூறுகிறார்.

"ஆங்கிலத்தை வாணிபத்தின் மொழியென்றால்,பிரெஞ்சு தூதின் மொழியாகும். இலத்தின் சட்டத்தின் மொழி என்றால், ஜெர்மன் தத்துவத்தின் மொழியாகும். இத்தாலி காதல் மொழியென்றால், தமிழே பக்தியின் மொழியாகும்.

தமிழில் இரங்குவது போல வேறு எந்த மொழியிலும் இரங்க முடியாது என்பது அடிகளாரின் முடிந்த முடிவு. இதனை ஆங்கிலத்தில் பின்வருமாறு கூறுவார்:

" if latin is a language of law of medicine  French is a language of the diplomacy  German the language of science   English the language of commerce  then Tamil is a language of Bakti.  The devotion to the sacred and the Holy."

அருளாளர்களது தமிழ்க் கவிதைகளைப் பயிலுங்கால் நாம் அவர்கள் கண்ட அனுபவங்களை எய்துகிறோம். இறைவனோடு இரண்டறக் கலந்த அவர்களுடைய இனிய அருட்பேறுகளை உணர்கிறோம்.

"If the reality of law cannot be appreciated without the study of latin, if science cannot be fathomed without a study of english, french and German. " If monotheism cannot be understood without study of sovient languages. If philosophy and grammer cannot be admired without a study of sanskrit.  The depth of the literature of the Hymns or the sool stirring songs cannot be plumbed except through Tamil. When we read the poems of the tamil saints thanks to their poetry we experience perhaps as it were in a dream their mystic communion with God.

பைந்தமிழே பக்திக்குரிய மொழியென்று தனிநாயகஅடிகளார் எடுத்துரைத்துள்ளார்.

பெருந்தமிழறிஞர் தெ.பொ.மீ., கவிஞர் இரா முருகவேள், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரும் தமிழ் வழிபாட்டின் தனிச்சிறப்பினை தக்கமுறையில் வலியுறுத்திச் சென்றுள்ளனர். ஆனால் 1950 இல் மறைந்த நம் மறைமலை அடிகளார், இன்றவர் மறைந்து 66 ஆண்டுகள் உருண்டோடிய நிலையிலும் தமிழ் வழிபாடு தட்டிக்கழிக்கப்படுகின்றது. எனவேதான் அடிகளார் தான் வாழ்ந்த காலத்தில் தமிழ் வழிபாடு பற்றி இடித்துரைத்த பேருண்மையை எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். இதோ அவர் மொழிந்தவை .

" Even the worship in tamil temples are conducted in sanskrit..... just imagine the sheer bravado and cunning of these of Aryan Brahmins who in the very temples built by tamil kings and graced by tamil saivait saints offer worship in a language (sanskrit) quite foreign and not understandable to the Tamil people. Do you think that the people who did this and disparagingly dismiss Tamil hymns, "Sudya hymns" will upon independence ever give us our rights or even dream of it."

It should be noted that Adikal was initially supportive of indian nationalism. But recognising that the nationalist elite were not sincere in their approach to the question of caste, he made a break with it in the 1920s. He lamented that "The indian people who are hopelessly divided amongst themselves and clinging to most ignorant customs, devil worship and Brahmin reverence are unfit to rule themselves."

In his distrust of indian nationalist elites, he shares a commonality with Periyar. Though there were fierce arguments between the theologian and the atheist on the possibility of a reformed Saivism, there were also collaborations between the two leaders at several occasions. It would not be unfair to expect that the contributions of Adikal be given their due by those celebrating the century of the launch of the non Brahmin movement.

தமிழ்நாட்டு வழிபாடு இன்றும் வடமொழியிலேயே நடைபெறுகின்றது . ஆரியப் பார்ப்பனரின் போலி வீரத்தையும், வஞ்சம் நிறைந்த சூழ்ச்சியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் இக் கோயில்கள் அனைத்தும் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டவை. அத்தோடு சிவநெறி தழுவிய நம் செந்தமிழ் அடியார்களால் இக் கோயில்களில் எழுந்தருளியுள்ள இறைவன் மீது பக்திச் சுவை நனி சொட்ட பாடல்கள் பாடப்பட்டுள்ளன. நிலைமை இவ்வாறிருக்கையில் எமக்குப் புரியாத வடமொழியில் வழிபாடு நடாத்தப்படுகின்றது. இவ்வடியார்களின் பாடல்களை சூத்திரர்களின் பாடல்கள் என்று வெறுப்போடு ஒதுக்கும் இப் பார்ப்பனர்கள் இந்தியா விடுதலை பெற்ற நிலையில் எங்கள் உரிமைகளை வழங்குவார்கள் என்று நாம் கனவுகூடக் காண முடியுமா?

(This quotation is taken from an article written by Ravi Vaitheespara titled The question of Colonialism and Imperialism in Tamil Nationalist Thought: The case of Maraimalai Adigal and Non-Brahmin Tamil Nationalism in Southern India (1876-1950) -page56. the name of the book New Demarcations.

Essays in Tamil Studies. Edited by R.Cheran Darshan Ambalavanar and Chelva kanaganayakam.

தென் இந்தியாவில் பார்ப்பனர் நீங்கலான-- தமிழ்த் தேசியச் சிந்தனையில் வல்லாண்மை என்ற பகுதியில் மறைமலை அடிகளின் பங்களிப்புப் பற்றி ரவி வைத்தீஸ்வரா எழுதிய குறிப்பு இது.

இது பக்கம் 56 ல் வருகிறது. தமிழ் ஆய்வுகள் என்ற கட்டுரைகளைத் தாங்கிய " புதிய கோடுகள்' என்ற நூலில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூல் பேராசிரியர்கள் உ.சேரன், தர்சன் அம்பலவாணர் ,செல்வா கனகநாயகம் ஆகியோரின் ஆய்வின் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

மறைமலை அடிகளாரின் தலை சிறந்த மாணவர் முருகவேள் உணர்த்தும் உண்மை:

"மொழிகள் பலப்பலதாம் மூதுலகில் உண்டு இழிவின்றவையுயர்ந்த வேனும்-
விழிமியதுதம் நம் செந்தமிழ் போல் தெய்வத் திம் சிறந்த கீர்த்தி மற்ற மொழிக்கேதும் உண்டோ ஈண்டு.

பாவேந்தர்

தமிழர் கோவில்களில் மட்டுமல்ல தமிழர் திருமணமும் தமிழில் நடைபெற வேண்டும் என்பது பாவேந்தர் பாரதிதாசனார் கூற்றாகும். மணமக்கள் தமை "தமிழர் வாழ்த்தும் வண் தமிழுக்கே இணையாகப் பார்ப்பான் சொல் வடமொழியா தமிழர் செவிக்கு இன்பமூட்டும்" என்ற கேள்வியைக் கேட்டு மணமக்கள் இல்லறத்தை மாத்தமிழால் தொடங்குக இன்பம் நல்கும்" என்று தெளிவோடும், துணிவோடும் கருத்துகளை வழங்குகிறார். இதே பாரதிதாசன் கோயில்களில் தமிழே அரசோச்ச வேண்டும் என்பதை" சொற்கோவில் நற்போற்றித் திரு அகவல் செந்தமிழில் இருக்கும்போது கற்கோயில் உட்புறத்தில் கால் வைத்தது. எவ்வாறு "சகத்திரநாமம்' என்ற வினாவை விடுக்கும் நம் கவிஞன் கோயில் படிக்கட்டின் கீழ் நின்று தமிழ் மானத்தை வடிகட்டி வடமொழியை மந்திரம் என்று உவக்கின்ற எம் மடையரைப்பற்றி எண்ணி ஏங்குகின்றார்.

வழிபாட்டில் வல்லாண்மை என்ற நூலில் அதன் ஆசிரியர் கு.ச. ஆனந்தன் தமிழ்நாட்டின் பழம் புகழ் மிக்க பழனித் திருக்கோயிலில் தமிழ் அடியோடு ஒழிக்கப்பட்ட செய்தியை எம் கண்களில் நீர் பெருகக் கூறியுள்ளார்.

மேற்கூறிய அறிஞர்கள் கூற்றுக்கு மேலாக வடலூர் வள்ளலார் கூறியுள்ள கூற்றுக்கள் எம் சிந்தனையைத் தூண்டுவதாகும்.

"புதிதாக சிலர் சமற்கிருத மொழிக்குத்தான் கடவுளைச் சென்றடைய வல்ல அதிர்வு சக்தி உண்டென்றும் ஆதலால் சமற்கிருதத்திலேயே வழிபாடு வேண்டுமென்றும் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. எல்லா மொழி ஒலிகளுக்கும் அதிர்வு சக்தி உண்டு. படை அணிகள் பாலங்களில் அணிநடை பயிலாததற்கு அதிர்வு சக்தி பற்றிய அச்சமே காரணமாகும். இன்னும் சொல்லப் போனால் தமிழ்மொழி ஒலிக்கே சக்தி அதிகம் உண்டு." என்ற வடலூர் வள்ளலார் கூறும் கூற்று கண்ணைத் திறக்க வேண்டும்.

ஆர்.கே.சண்முகம்

"தமிழனுக்குத் தேசியம் என்றால் இந்தி. அனைத்துலக மொழி என்றால் ஆங்கிலம். வழிபாடு என்றால் வடமொழி. இசை என்றால் தெலுங்கு. எங்கே தமிழ் என்று ஏங்கியவர் நம் சண்முகம் செட்டியார். இவர் இந்திய மைய அரசின் முதல் நிதி அமைச்சர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் துலங்கியவர். தமிழிசை இயக்கத்தின் தூணாக விளங்கியவர். இவ் இயக்கத்திற்கு வலுவூட்டியவர். இவரின் ஏக்கத்தைப் போக்க ஆக்கம் காண வேண்டியது நம் கடமையாகும்.

திருமறைக்காட்டில் தேவார தமிழ் ஒலிக்கு கதவு திறந்ததே இதற்குத் தக்க சான்றாகும். எனவே 21ம் நூற்றாண்டிலாவது தமிழ் மக்கள் தம் அறியாமையை அகற்றி எம் கோயில்களிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் ,இறப்பு நிகழ்ச்சிகளிலும் எம் தமிழை ஒலிக்கச் செய்வோம்.

"பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும்.
ஓடையிலே என் சாம்பல் கரையும் போதும் ஒண்தமிழே சலசலத்து ஓட வேண்டும்.''

- என்று ஓர் ஈழத்துக் கவிஞர் கண்ட கனவை நனவாக்குவோம்.

தமிழனைத் தமிழன் ஓம்பின்
தாரணி தமிழை ஓம்பும்.!!!!

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.