தூத்துக்குடியில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா... PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 மே 2017 14:19

21-5-17 அன்று தூத்துக்குடி கைலாசு திருமண மண்டபத்தில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா தமிழ் அமைப்புகளின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்தோரை திரு.ச. அழகு வரவேற்றார்.

திரு. அ. திருச்சிற்றம்பலம் விளக்கேற்றிவைத்தார். தமிழர் தாயகம் இதழ் ஆசிரியர் பேரா. மு.செ. அறிவரசன் தலைமை தாங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் ஈ. சங்கரநாராயணன் நிகழ்ச்சிகளை சிறப்பாகத் தொகுத்துரைத்தார்.

தனித்தமிழ் போராளியான புலவர் வே. தமிழ்மாறன் படத்தினை உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் திறந்து வைத்தார். செ.ரெ.வெனி. இளங்குமரன், பேரா. சு. அழகேசன், ந. மணிமாறன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. மு. இளமுருகன் உரையாற்றினார். தொல்லியலும் திருத்தலியலும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அர.பூங்குன்றன் உரையாற்றினார்.

தனித்தமிழ் இயக்கத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் திருவாட்டி தழல். தேன்மொழி உரையாற்றினார்.

உலகத்தமிழ்க் கழகத் தலைவர் புலவர் கதிர். முத்தையன் உரையாற்றினார்.

சொல்லாய்வறிஞர் முனைவர் ப. அருளியார் விழாப் பேருரை நிகழ்த்தினார்.

தீர்மானத்தை முன்மொழிந்து தா. அன்புவாணன், வெற்றிச்செல்வி பேசினார்.

போட்டிகளில் பரிசுபெற்ற மாணவர்களுக்கு பழ.நெடுமாறன் பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.

மற்றும் விழாவில் புலவர் ஆ. நெடுஞ்சேரலாதன், வழக்கறிஞர் பொ. இளஞ்செழியன், ச. முத்துக்குமரன், சுப. நயினார், இரா. முகுந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். தென்மொழி ஈகவரசன் தமிழுணர்வுப் பாடல்களைப் பாடினார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.