உலகப் பெருந்தமிழர் இரா.செழியன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 11:52

மூத்தத் தலைவரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் அவர்கள் காலமான செய்தி அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை அளித்துள்ளது. எளிமையும், பண்பாடும் நிறைந்தவர். இந்திய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணி குறிப்பாக அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் துணிகரமாக அவர் ஆற்றிய உரை என்றென்றும் நினைவு கூரப்படும். நெருக்கடி நிலை காலத்தில் நடைபெற்ற சனநாயகப் படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிநாயகம் ஜெ.சி. ஷா ஆணையம் அளித்த அறிக்கை வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை துணிந்து அச்சிட்டு வெளியிட்ட பெருமை இரா. செழியன் அவர்களையே சாரும்.

அவரது வாழ்வின் இறுதிப் பகுதியை எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் கழிக்க வைத்தப் பெருமை வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தரும், அவரது நெருங்கிய நண்பருமான கோ. விசுவநாதன் அவர்களைத்தான் சாரும். அப்பல்கலைக் கழகத்தின் வருகை தரு பேராசிரியராக அவரை நியமித்து அங்குள்ள விருந்தினர் விடுதியிலேயே தங்கவைத்து அவரைப் பேணிக்காத்தப் பெருமை விசுவநாதன் அவர்களுக்குரியது.

28-4-2017 அன்று சென்னையில் இரா. செழியன் அவர்களின் 95ஆவது பிறந்த நாள் விழாவில் சீரும் சிறப்புமாக திரு. விசுவநாதன் அவர்கள் நடத்தினார்கள். கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். ஆனால், இவ்வளவு விரைவாக அவர் மறைந்துவிடுவார் என்று யாரும் எண்ணவில்லை.

அவரின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.