தமிழ்த்தேசியப் போராளி ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 31-7-17 அன்று சென்னை சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இரா. நல்லகண்ணு தலைமை தாங்கினார். பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் படத்தினை வைகோ திறந்து வைத்தார். இயக்குநர் கெளதமன் தொகுப்புரை வழங்கினார். கவிஞர்கள் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், அறிவுமதி, தஞ்சாவூர்க் கவிராயர், பழனிபாரதி, யுகபாரதி, பச்சியப்பன், ஜெயபாஸ்கரன், இளையகம்பன், கவி பாஸ்கர் ஆகியோர் உரையாற்றினர்.
கலைஞர்கள் நடிகர் சிவக்குமார், எழுத்தாளர் பாவை சந்திரன், பிரபஞ்சன், இயக்குநர்கள் வசந்தபாலன், ஜெ.கே., புகழேந்தி தங்கராஜ், தரணி, டி. அருள் எழிலன், ஓவியர் மணியம்செல்வன், ட்ராட்ஸ்கி மருது, விஸ்வம், மனோகர், அரஸ், கீதா மற்றும் நாடகப் பேராசிரியர் இரா. இராசு, கவிஞர் இளம்பிறை, பாடகர் புதுவை செயமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக தலைவர்கள் வைகோ, முனைவர் ம. நடராசன், தொல் திருமாவளவன், சீமான், பேரா. நாகநாதன், கொளத்தூர் மணி, பெ. மணியரசன், கோவை இராமகிருட்டிணன், தியாகு, த. வெளளையன் ஆகியோர் உரையாற்றினர்.
காஞ்சிபுரம்
30-7-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காஞ்சிபுரம் ராஜ்பவன் திருமண மண்டபத்தில் ஓவியர் வீர.சந்தானம் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மரு. விமுனா மூர்த்தி தலைமை தாங்கினார். வீர.சந்தானம் படத்தினை புலவர் கி.த. பச்சையப்பன் திறந்துவைத்தார். காஞ்சி அமுதன் வரவேற்புரை ஆற்றினார். க. கோதண்டன், சி. நடராசன், து.ரா. பாரதி விசயன், கவிஞர் அமதகீதன், பாசறை அ. செல்வராஜ், பூ.கா. பொன்னப்பன், ஓவியர் அ. விஸ்வம் ஆகியோர் நினைவுரை ஆற்றினர் |