பேராசிரியர் கல்விமணியின் தன்னலமற்ற தொண்டு |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:31 |
பேராசிரியர் கல்விமணி அவர்கள் தன்னை முழுமையாக மக்கள் தொண்டிற்காக அர்ப்பணித்துக்கொண்டவர். குறிப்பாக பழங்குடி மக்களின் உயர்வுக்காக அயராது தொண்டாற்றி வருபவர். அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் தகர்த்து அவருடைய தொண்டு தொடர்வதற்கு துணைபுரிந்த பெருமை மதிப்பிற்குரிய கே. சந்துரு அவர்களைச் சாரும்.
பொடா வழக்கில் நானும் தோழர்களும் சிறைப்பட்டபோது பேரா. கல்வி மணி அவர்கள் பொடா வழக்குக் குழுத் தலைமையை ஏற்று எங்களின் விடுதலைக்காக மக்கள் இயக்கங்களை நடத்தியும் வழக்கு நடத்த நிதிதிரட்டியும் அயராது தொண்டாற்றி எங்களின் விடுதலைக்கு உதவிய பெருமைக்குரியவர்.
"உரிமைகளை நிலைநிறுத்திய உன்னதத் தீர்ப்புகள்'' என்னும் நூலை வெளியிடத் தகுந்தவர் அவரே என முடிவு செய்து அழைத்தோம். எங்களின் அன்பழைப்பை ஏற்று இந்நூலை வெளியிட்டுச் சிறப்பித்த அவர்களுக்கு எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். (பழ. நெடுமாறன்) |