காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு மூலமே தீர்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 நவம்பர் 2017 12:29

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
காஷ்மீர் பிரச்சினையை படை வலிமை கொண்டு தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக ஓய்வு பெற்ற உளவுத்துறைத் தலைவரை சிறப்புப் பிரதிநிதியாக இந்திய அரசு நியமித்துள்ளது. ஆனால், இதன் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசமும் மீதமுள்ள பகுதி இந்தியாவிலும் உள்ளன. ஐ.நா.வில் இந்தியா மீது பாகிஸ்தான் புகார் செய்தது. அப்போதைய இந்தியத் தலைமையமைச்சர் நேரு காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி இறுதித் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார். ஐ.நா. பேரவையிலும் இந்தியப் பிரதிநிதி இந்த வாக்குறுதியை உறுதி செய்தார். அதன்படி காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தித் தீர்வு காண முன்வருவதே சனநாயக வழியாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.