தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி 27-11-2017 அன்று மாலை 5 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கலந்துகொண்டு பங்கேற்ற இந்நிகழ்ச்சி மாவீரர் சுடரை திருமதி. மோகனதாசு சாரதா தேவி ஏற்றி வைத்தார்.
இவரின் இரு புதல்வர்களான கரும்புலி சீராளன், சிறீதரன் ஆகியோர் மாவீரர்களானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரைத் தொடர்ந்து அனைவரும் சுடரை ஏற்றி மறைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் விளார் ம. சாமிநாதன், பச்சை தமிழகக் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழுத் துணைத்தலைவர்கள் ம.பொன்னிறைவன், பேரா. சி. இராமமூர்த்தி, சா. இராமன், உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர்-நாயகம் ந.மு. தமிழ்மணி, செயலாளர்கள் எஸ். செளந்தரபாண்டியன், ஜோ. ஜான்கென்னடி, து. குபேந்திரன், பி. வரதராசன், மு. சந்திரன், அறக்கட்டளை உறுப்பினர் வ. தீனதயாளன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சி. முருகேசன், எம்.ஆர். மாணிக்கம், தி.மா. பழனியாண்டி, பொன். வைத்தியநாதன், வைகறைவாணன், செ.ப. முத்தமிழ்மணி, சிலம்பு நா. செல்வராசு, இரா. இளமுருகன், அருட்தந்தை பாலு, புலவர் இரத்தினவேல், க. தெய்வசிகாமணி, மறை. தி. தாயுமானவன், பேரா. த. மணி, கா. தமிழ்வேங்கை, மரு. கண்ணன், முனைவர் சு. தமிழ்வேலு, முனைவர் கு. அரசேந்திரன், முனைவர் பே. லோகநாதன், சாமி. கரிகாலன், பா. இறையெழிலன், சுப. உதயகுமாரன், இரா. முரளிதரன், சி. அறிவுறுவோன் மற்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த நா. வைகறை, பழ. இராசேந்திரன், தமிழர் தேசிய முன்னணியைச் சேர்ந்த மரு. பாரதிசெல்வன், ச. கலைச்செல்வம், இராஜசேகர், பாலசுப்ரமணியன், சதா. முத்துக்கிருஷ்ணன், கே.சி. பழமலை, ஜெயப்பிரகாஷ், சண்முகசுந்தரம், ச. இலாரன்ஸ், தமிழ்மாறன், செஞ்சி சாய்ரா உட்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். |