கடலோனியா நிகழ்வு மாபெரும் அரசியல் பிழை : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 16:10

கடலோனியாவில் உள்ள கம்யூனிஸ்டுகளும் சாதாரண குடிமக்களும் முழுக்க முழுக்க சட்டரீதியான அபத்தங்களையும் மிகமோசமான அரசியல் தவறையும் சந்தித்து வருகின்றனர். கடலான் ஜனநாயக அரசின் ஒன்பது உறுப்பினர்களை ஃபாசிஸ்ட் படைகள் சிறைபிடித்துள்ளன. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து நகரத் தந்தை அதா கொலாவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "இன்றைய தினம் ஜனநாயகத்திற்கும், கடலோனியா விற்கும் ஒரு கறுப்புதினமாகும். ஒருசில மணிநேரத்திற்கு முன்புதான் துணைத் தலைவர் ஓரியல் ஜான்குராஸ் மற்றும் ஜோர்டி துருல், தோலார்ஸ் பாஸா, ஜோசப் ரல், மெரிட்செல் போராஸ், ரவுல் ரொமேவா, கார்லெஸ் முண்டோ, சாண்டி வில, ஜோக்விம் ஃபார்ன் ஆகியோரையும் கைது செய்வதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதே நேரத்தில், தற்போது பெல்ஜியத்தில் உள்ள தலைவர் கார்லஸ் பிக்டெமாண்ட் மற்றும் அமைச்சர்கள் அந்தோணி கோமின், மெரிட்செல் செரெட், லூயிஸ் பிக், கிளாரா பொன்சட்டி ஆகியோருக்கு எதிராக சர்வதேச கைது வாராண்டும் பிறப்பிக்கப்பட்டது.

விதி 155-இன் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டாலும், நகர அரசின் முழுமையான அமர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற அடிப்படையில் அவர்கள் இன்னமும் கடலான் அரசின் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றனர்.

ஐரோப்பிய ஜனநாயகத்தில் சமீபத்தில் இதுவரை வரலாறு கண்டிராத ஒரு நிகழ்வாக தற்போதைய ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் சட்ட அபத்தங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தீர்வுக்கு வழிகாண்பதற்குப் பதிலாக தற்போது நிலவும் மிகமோசமான அரசியல் அபத்தங்கள் இவர்களை வேடிக்கை பார்ப்பவர்களாக ஒரு இடைவெளியில் தள்ளி வைத்துள்ளது.

கடலான் அமைப்புக்களையும் அதன் நியாயமான பிரதிநிதிகளையும் இழிவுபடுத்துவதே இவற்றின் உள்நோக்கமாகும். ஜனநாயகம் மீட்கப்பட்டதற்குப் பின்பு கடலான் அரசாங்கத்தின் மீது நடத்தப்படும் மிக மோசமான ஒரு தாக்குதல் இது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

கடலான் கல்விச்சாலைகள் மற்றும் பிற பொது அமைப்புக்களின் மீதான தாக்குதலாக மட்டுமின்றி ஸ்பானிஷ் அரசின் ஜனநாயக அடித்தளத்திற்கே எதிரானதாக இதைப் பார்க்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாகக் கருதப்பட்டவர்களே இப்போது அதனை அவமரியாதை செய்பவர்களாக மாறியுள்ளனர். அதிகாரப் பிரிவினை ஆபத்தில் சிக்கியுள்ளது.

கடலோனா மற்றும் ஸ்பெயினில் உள்ள ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடலோனாவின் தலைநகர் பார்சிலோனாவின் நகரத் தந்தை என்ற முறையில், வாழும் சூழ்நிலையைச் சரியாகப் புரிந்து கொண்டு மக்களாகிய நாம் அனைவரும் நம் கருத்தை துணிச்சலோடு தெரிவிப்பதோடு, கடலான் அமைப்புக்கள் மற்றும் அதன் சட்டரீதியான பிரதிநிதிகளுக்கும் நமது ஆதரவை உறுதி செய்ய வேண்டும்; அனைத்து கைதுகளுக்கும் நமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன் என்று வலியுறுத்துகிறேன். இந்த அடக்குமுறை வளையத்திற்கு மரியானோ ரஜாய் அரசு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட துணைத் தலைவர் ஜான்குராஸ், எட்டு அமைச்சர்கள் மற்றும் ஜோர்டி சஞ்சஸ், குயிக்ஸார்டும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கம்யூனிஸ்டுகள் வலியுறுத்துகின்றனர். கடலோனியா மற்றும் ஸ்பெயின் இடையிலான உறவுப் பிரச்சனை சிறைகள் மூலமாக இல்லாமல் வாக்குச் சீட்டுகள் மூலமாகத் தீர்க்கப்பட வேண்டும்.

அதிகார வர்க்க ஆணவ நடவடிக்கைகள் அரங்கேறியுள்ள இந்தச் சூழ்நிலையில் கடலான் மக்களும், அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் கடலான் நலனில் அக்கறை கொண்ட ஜனநாயக மாண்புகளைக் காப்பதில் அக்கறை கொண்ட உள்ளூர் அரசாங்கங்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டுகிறேன். அப்போதுதான் மரியானோ ரஜாய் அரசின் ஆணவப்போக்கினையும் கடலோனியா அமைப்புக்களின் மீதான தாக்குதலையும் எதிர்கொள்ள முடியும். சமூக ஒற்றுமையைக் காப்பாற்ற இயலும். சுய-அரசாங்கத்தை மீட்க முடியும்.

இறுதியாக அநியாயமாகச் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களின் நண்பர்கள், குடும்பத்தார்கள் மற்றும் சக பணியாளர்கள் ஆகியோருக்கும் ஜோர்டி சஞ்சேஸ் மற்றும் ஜோர்டி குயிக்ஸார்ட் ஆகியோருக்கும் எனது பாராட்டுக்களையும் ஆதரவையும் தெரிவிக்கின்றேன்'' என்று கூறப்பட்டுள்ளது.

நியூ ஏஜ், தமிழில்: விகேஜி
நன்றி: ஜனசக்தி டிசம்பர் 3, 2017

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.