சிதம்பரம் நகராட்சி - சீர்கேடு த.தே.மு. மாணவர் அணி ஆர்ப்பாட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 16:20

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் கடந்த ஓராண்டாக பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக நகராட்சி நிர்வாகத்தால் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டன . ஏற்கனவே சாலை வசதிகள் சரியில்லாத நிலையில் பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழிகள் பொதுமக்களையும்,வாகன ஓட்டிகளையும், பள்ளி செல்லும் பிள்ளைகளையும் மேலும் சிரமத்திற்குள்ளாக்கின.

இந்நிலையில்

3-12-2017 அன்று சிதம்பரம் தொப்பையன் தெருவில் வசித்து வந்த சரஸ்வதி என்ற 75 வயது மூதாட்டி தொப்பையன் தெருவில் பாதாள சாக்கடைக்காக வெட்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி குழியனெ தெரியாதிருந்ததால் தவறி விழுந்து உயிரிழந்தார். சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், வெட்டப்பட்ட, குழிகளில் எந்த எச்சரிக்கைப் பலகையும் வைக்காததுமே உயிரிழப்பு நிகழக் காரணமாக இருந்தது. சிதம்பரம் நகராட்சியின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்தும் , தமிழகஅரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ள செட்டாப் பாக்ஸ்களை அரசு நிர்ணயித்த 200ரூபாயை விட கூடுதலாக வசூல் செய்வதை தடுத்து அரசு நிர்ணயித்த விலையில் வழங்கிட கோரியும் , சிதம்பரம் நகர கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழர் தேசிய முன்னணியின் மாணவரமைப்பின் சார்பில் 8-12-2017 அன்று காலை 10மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் மாநில மாணவரனி அமைப்பாளர் செ.செயப்பிரகாசு தலைமை வகித்தார்.
தமிழர் தேசிய முன்னணியின் கடலூர் மாவட்ட தலைவர் கீ.செ. பழமலை முன்னிலை வகித்தார்

மாநிலப் பொதுச் செயலாளர், புதுவை.ந.மு.தமிழ்மணி, நாகை மாவட்டத் தலைவர் முரளிதரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இரா.வை. பாலசுப்ரமணியன் (கடலூர் மாவட்டப் பொருளாளர்), பா.பாரதிதாசன் (கடலூர் மாவட்டச் செயலாளர்),க.ஜெயக்குமார் (சிதம்பரம் நகர தலைவர்), க.கலையரசன்(அண்ணாமலைநகர் நகர செயலாளர்),இராஜராஜன்(நாகை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் பங்கேற்றனர். சி.முகமது அனிஃப் (கடலூர் மாவட்ட ஊடகவியலாளர்) நன்றியுரையாற்றினார்.

உயிரிழந்த சரஸ்வதியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும், சாலை வசதிகளை விரைந்து முடித்துத் தரவும், பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழிகளில் எச்சரிக்கைப் பதாகை வைக்கவும், கேபிள் டி.வி நிறுவனங்கள் செட்டாப் பாக்ஸிற்கு அதிகமாக வசூல் செய்வதைத் தடுத்து அரசு நிர்ணயித்த விலையில் மக்களுக்குக் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்.டி.ஓ.விடம் மனுவாக தரப்பட்டது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.